பெண் போலீசாரின் செம குத்து! மேடையில் ஒன்று கூடி போட்ட கெட்ட ஆட்டம்!

டெல்லியில், பெண் போலீசாருடன், ஐபிஎஸ் அதிகாரியும் ஒன்று சேர்ந்து, குத்தாட்டம் ஆடிய காட்சி பார்ப்பதற்கு கண்கொள்ளாத ஒன்றாக இருந்தது.


கடந்த சனிக்கிழமை, அதாவது மார்ச் 30ம் தேதி டெல்லியின் தென்மேற்கு மாவட்ட போலீசாருக்கு,  சுனோ சாஹேலி என்ற பெயரில் கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், அனைத்து மகளிர் போலீசாரும் பங்கேற்று தங்களுக்கு பிடித்தமான பாடல்களுக்கு நடனமாடி வந்தனர். 

குறிப்பாக, சப்னா சவுத்திரியின் ஹரியானா வகையான குத்துப் பாடல் டிராக் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அப்போது, மேடை ஏறிய 3 , 4 பெண் போலீசார் உற்சாகமாக பாடலுக்கு நடனமாடினர். அப்படியே உற்சாகத்தின் உச்சம் எட்டிய அவர்கள், அங்கே அமர்ந்திருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி பெனிட்டா மேரி ஜெய்கரை கை பிடித்து இழுத்து, மேடையேற்றிவிட்டனர். தங்களுக்கு ஒரு பாடலுக்கு ஆடும்படி அவர்கள் கேட்கவே, அவரும் உடனடியாக, உற்சாகமாக ஆட தொடங்கினார்.

ஐபிஎஸ் அதிகாரியும், போலீசாரும் என பெண்கள் அனைவருமே ஜாலியாக குத்தாட்டம் ஆடும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.