மனைவியை சங்கிலியால் கட்டி வைத்து 1 வருடமாக சித்ரவதை செய்த கணவன்! அதிர வைக்கும் காரணம்!

கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை சங்கிலியில் கட்டிப்போட்டு, இஷ்டத்திற்கு அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்த கணவனை போலீசார் கைது செய்தனர்.


சத்தீஸ்கர் மாநிலத்தில்தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள கான்கெர் மாவட்டத்தின், சாரமா பகுதியில் வசிக்கும் தோமர் படேல் என்ற நபர்தான் இப்படி மனைவியை சித்ரவதை செய்து வந்திருக்கிறார். அவருக்கு மற்றொரு பெண்கூட கள்ளக்காதல் இருந்து வந்ததை, மனைவி கண்டித்துள்ளார்.

இதன்பேரில்,  கடந்த ஓராண்டாக, மனைவி என்றும் பாராமல் சங்கிலியில் கட்டி வைத்து, நினைத்த நேரத்தில் எல்லாம் இரும்பு ராடு முதல் குச்சிகள் வரை கையில் கிடைப்பதை வைத்து அவரை தோமர் படேல் அடித்து, சித்ரவதை செய்து வந்திருக்கிறார்.  இதுதவிர, கடந்த ஓராண்டாகவே, மனைவிக்கு சரியான உணவு வழங்காமலும் அவர் கொடுமைப்படுத்தியுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில், குழந்தைகளும் உள்ளனர்.

அவர்கள், உள்ளூரில் செயல்படும் மகளிர் பாதுகாப்பு அமைப்பு ஒன்றுக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது, தோமரின் மனைவி சங்கிலியில் கட்டிப் போடப் பட்டிருந்தார். அவரை உடனடியாக மீட்ட போலீசார், இந்த சித்ரவதையை செய்து வந்த கொடூர கணவனை உடனே கைது செய்தனர்.