தனியார் விடுதியில் கட்டாய சிறை! பாலியல் சித்ரவதை! அடிமைப் பெண்ணை மீட்டெடுத்த வாலிபர்

டெல்லியில் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட பெண்ணை அங்கு வாடிக்கையாளராக சென்ற ஒரு நபர் மீட்டுள்ளார்.


டெல்லி ஜிபி சாலையில் ஒரு தனியார் விடுதி ஒன்றில் பல நாட்களாக பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அவருக்கு அதிகப்படியான ஊதியம் வாங்கித் தருவதாக கூறி ஒரு நபர் அழைத்து வந்து மற்றொரு நபரிடம் அறிமுகம் செய்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணை அந்த நபர் ஏமாற்றி அப்பெண்ணிடம் இருந்த செல்போன் மற்றும் நகைகளை எடுத்து வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

இதையடுத்து அப்பெண் நீண்ட நாட்களாக அங்கு பாலியல் அடிமையாக இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வாடிக்கையாளராக வந்த ஒருவரிடம் தான் இங்கு அடைத்து வைக்கப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக அந்த நபரிடம் தெரிவித்துள்ளார்.

தனது செல்போன் மற்றும் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக தன்னை இந்த தொழிலில் ஈடுபடுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் தனது செல்போனில் அப்பெண்ணின் உறவினர்களுக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் அந்த நபர் அளித்த முழுமையான விலாசத்தை வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபச்சாரம் நடத்தி வந்த பெண்கள் மற்றும் அதனுடைய உடந்தையாக இருந்த நபர்களையும் கைது செய்துள்ளனர்.

மற்றும் மீட்கப்பட்ட பெண்களை காப்பகத்தில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.