காருக்குள் மனைவியுடன் இருந்த கணவன்! துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள்! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

டெல்லியில் துப்பாக்கி முனையில் கணவன் - மனைவியை மிரட்டி, மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லி மாடல் டவுன் பகுதியில் வசித்து வரும் வருண் பால் என்பவர் ஞாயிறன்று தனது மனைவி, குழந்தையுடன் மாமனார் வீட்டிற்குச் சென்றிருந்தார். பின்னர் நள்ளிரவில் வீடு திரும்பியபோது, வீட்டின் கேட் திறக்கப்பட்டு கிடந்ததையும், மோட்டார் சைக்கிள் ஒன்றில் 3 பேர் வந்து நிற்பதையும் வருண் பால் பார்த்திருக்கிறார்.

இதையடுத்து, பதட்டமடைந்த வருண், பின்புறமாகச்சுற்றி வந்து, தனது வீட்டின் வராண்டாவினுள் காரை நிறுத்தியுள்ளார். உடனே அங்கிருந்து அவர் வேகமாக ஓடிச் சென்று, கேட்டை மூட முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் வெளியே நின்றிருந்த 3 மர்ம நபர்களும் திடீரென துப்பாக்கியை காட்டி, வருணை மிரட்டியுள்ளனர். 

அதை வைத்தே உள்ளே நுழைந்த அவர்கள், வருணிடம் இருந்து பிரேஸ்லெட் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டார்கள். பின்னர், காரினுள் இருந்த அவரது மனைவி, குழந்தைகளை மிரட்டி, செல்ஃபோன் ஒன்றை பறித்துக் கொண்டனர். ஆனால், வேறு எந்த நகை, பணம் கிடைக்காததால் பின்னர் விரக்தியில் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

இதுபற்றி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் அனைத்தும் பதிவாகியுள்ளன. இதன்பேரில், வருண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் டெல்லியில் நடப்பது தொடர்கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.