கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கெத்து காட்டிய தவான்! கொல்கத்தா அணியை 2 போட்டிகளிலும் அடிச்சு தூக்கிய டெல்லி அணி!

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டென்லி முதல் பந்திலேயே அவுட் ஆனார்.பின்னர் கில்லுடன் இணைந்த ராபின் உத்தப்பா வேகமாக ரன்களை சேர்த்தார்.
இவர் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய கில் 39 பந்துகளில் 65 ரன்களை அடித்தார். அதிரடி மன்னன் ரஸ்ஸல் 21 பந்துகளில் 45 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது.கிறிஸ் மோரிஸ் , ரபடா சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டகாரர் தவான் சிறப்பாக விளையாடி அதிரடியாக ரன்களை சேர்த்தார். இவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 97 ரன்களை எடுத்தார். இளம் வீரர் ரிஷாப் பாண்ட் சிறப்பாக விளையாடி 46 ரன்களை எடுத்தார். இதனால் டெல்லி அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது.
சிறப்பாக விளையாடிய தவான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.