அஸ்வின் அணியை கதற வைத்த டெல்லி கேபிட்டல்ஸ்! தவான்,ஷ்ரேயஸ் ஐயர் அபாரம்!

கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியியல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி கிங்ஸ் XI பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. கிங்ஸ் XI பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கிறிஸ் கெயில் அபாரமாக விளையாடி 37 பந்துகளில் 69 ரன்களை குவித்தார். மந்தீப் சிங் 30 ரன்களை எடுத்தார்.டெல்லி அணியின் லாமிசான் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். ரபாடா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. அந்த அணியின் தவான் சிறப்பாக விளையாடி 56 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 58 ரன்களை எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனால்  டெல்லி அணி புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.