ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக போராடிய அசாம் மக்கள்! அதிர வைக்கும் காரணம்!

டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மக்களவையில் புதிய திருத்தி அமைக்கப்பட்ட குடியுரிமை சட்ட மசோதா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திருத்தி அமைக்கப்பட்ட சட்ட மசோதாவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்களது போராட்டத்திற்கு எந்த ஒரு நியாயம் கிடைக்காத நிலையில் நிர்வாணப் போராட்டத்தில் கையில் எடுத்துள்ளனர்.

இதனால் இந்திய தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட சட்ட மசோதாவில் சில முக்கிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எந்த ஒரு ஆவணமும் இன்றி இந்தியாவிற்கு வருபவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து எந்த ஒரு ஆவணமும் இன்றி இந்தியாவிற்குள் வந்த அவர்கள் குடியுரிமை பெற்ற இந்தியக் குடிமக்கள் ஆகின்றனர் .இந்நிலையில் இதனால் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் குறைய வாய்ப்புள்ளதாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதையடுத்து அம்மக்களின் கோரிக்கை எந்த ஒரு ஆவணமும் இன்றி அசாமில் குடியேறியவர்கள் அங்கு அனைத்து வசதிகளும் பெற்று வாழ்ந்து வருவதாகவும் அதனால் அசாமை பூர்வீகமாகக் கொண்ட மக்களுக்கு வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில்லை எனவும் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் வங்கதேசத்தில் இருந்து அசாம் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத நபர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் என்பதால் மீண்டும் அசாம் மாநிலத்தில் போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில் இந்திய தலைநகர் டெல்லியில் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இருந்தும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த மக்கள் மாற்றியமைக்கப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.