ஜெயலலிதா சொத்தது வரப்போகிறது என்று கோடி கோடியாக ஏமாற்றினார் பப்பிமா! நிர்வாகி திடுக் புகார்!

ஜெயலலிதாவின் சொத்துகள் தனக்கு வரப்போவதாக கூறி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக தீபா மீது அவரது கட்சி நிர்வாகி இசிஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக ராமச்சந்தின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு நான் அம்மாவின் இரத்த வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக தீபாவின் பின்னால் அணி வகுத்தேன்.அப்போது பயங்கரமான பண கஷ்டத்தில் இருப்பதாகவும் அம்மாவின் பணம் சொத்து வந்து விடும் என ஆசை வார்த்தை கூறி பல கட்டங்களாக ஒரு கோடியே பன்னிரண்டு லட்சம் பணம் வாங்கி கொண்டு திருப்பி தர வில்லை.

நான் கொடுத்த பணத்தை கேட்டதால் என்னை அசிங்கமாக திட்டி கட்சி யில் இருந்து நீக்கி விட்டார்.அன்றிலிருந்து இன்று வரை பணத்திற்காக பல வகையில் போராடி கொண்டிருக்கிறேன்.

அதற்கு எந்த பலனும் இல்லை.அதனால் காந்தி வழியில் ஜெ.தீபா வீட்டை முற்றுகை போராட்டம் நடத்த இருக்கிறேன்.அதற்கு பல சங்கங்களும் பல அமைப்புகளும் எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள்.

அதே போல் தீபா பேரவை யால் பாதிக்கப்பட்டவர்களும் எனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் தீபா வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.