தமிழகத்தில் திரும்பவும் முழு ஊரடங்கா..? என்னவென்று நாளை தெரிந்துவிடும்..

நாளுக்கு நாள் கொரோனா தொற்றும், மரணங்களும் அதிகரித்துவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.


அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறை இருந்தால் மட்டுமே, கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் சரியாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் குழு,முதல்வருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையே காவல் துறையும், உளவுத்துறையும் அறிக்கையாக கொடுத்துள்ளன. ஆகவே, நாளை மீட்டிங் முடிந்ததும் மற்ற ஊர்களுக்கு ஒரு வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.