பெற்ற மகளை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிய தாய்! விசாரணையில் அம்பலமான பதற வைக்கும் காரணம்!

அமெரிக்காவில் அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க முயன்ற மகளை தாயே துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் 18 வயது மிக்க இளம்பெண் தனது படிப்பை முடித்துவிட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார். நீண்ட நாட்கள் கழித்து தனது தாயை பார்க்கச் செல்கையில் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என திட்டமிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். 

வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக வசித்து வந்த தாய் யாரோ திருடன் தான் இந்த நேரத்தில் திருட வருகிறான் என நினைத்து கதவை திறந்து வைத்து துப்பாக்கி முனையில் எதிர்பார்த்திருந்தார். இதை அறியாத மகள் திடீரென வீட்டுக்கு உள்ளே நுழைய யாரென கவனிக்காமல் துப்பாக்கியால் தன் சொந்த மகளையே சுட்டுள்ளார். 

அதன்பிறகுதான் மகள் என அறிந்து அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இச்சம்பவத்திற்கு போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டுமா? வேண்டாமா? என கலந்து ஆலோசித்து வருகின்றனர். 

அமெரிக்காவில் இது போன்று தவறுதலாக துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த சம்பவம் நிறைய இருக்கின்றன. வருடத்திற்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்படி தவறுதலாக துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.