சொத்துத் தகராறில் தம்பி, தம்பி மனைவியை கொன்ற பெண் ஒருவர் மகளை கொடுமைப்படுத்திய மாமியாரையும் கொலை செய்தது தற்போது தெரியவந்துள்ளது.
மாமியாரை கொன்று புதைத்து செடி நட்ட மருமகள்! நாமக்கல்லில் தாயுடன் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்! அதிர்ச்சி காரணம்!
திண்டுக்கல் மாவட்டம் தாசநாயக்கனூரை சேர்ந்த செல்வராஜ், தன்னுடைய மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க மனைவி வசந்தாமணியுடன் அக்கா வீட்டிற்கு சென்றபோது கொல்லப்பட்டார்.
இதையடுத்து கண்ணம்மாளை கைது செய்து போலீசார் விசாரிக்கையில் தனது சம்பந்தியையும் இவர் கொலை செய்தது தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கண்ணம்மாள் போலீசாரிடம் தெரிவிக்கையில் தனக்கும் தன்னுடை தம்பிக்கும் சொத்துத் தகராறு இருந்ததால் நானும் என் மருமகன் நாகேந்திரனும் சேர்ந்து திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த அவர்களை கொன்றுவிட்டதாகவும், அவர்களது உடலை தோட்டத்தில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இது மட்டும் இன்றி தனது மகள் பூங்கொடிக்கும், நாகேந்திரன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணத்தை பூங்கொடியின் மாமியார் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அடிக்கடி அவர் பூங்கொடியை கொடுமை படுத்தி வந்தார். மகள் நன்றாக வாழ வேண்டும் என்றால் சம்பந்தியை கொல்ல திட்டமிட்டதாகவும் தெரிவித்தார் கண்ணம்மாள்.
குடிபோதைக்கு அடிமையான மருமகன் நாகேந்திரன் மறுவாழ்வு சிகிச்சைக்காக பெங்களூரு சென்றிருந்த சமயத்தில் சம்பந்தி ராஜாமணியை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்ததாகவும், அவர் வந்தவுடன் சோற்றில் மயக்க மருந்து கலந்து பின்னர் மகள் உதவியுடன் கொலை செய்ததாகவம் சாதாரணமாக தெரிவித்தார் கண்ணம்மாள்.
இதையடுத்து பூங்கொடியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதை அடுத்து இவை அனைத்தும் உண்மை என தெரியவர அவரை கைது செய்தனர். மேலும் சிகிச்சை முடிந்து திரும்பிய கணவரிடம் மாமியார் காணவில்லை என பூங்கொடி நாடகம் ஆடியுள்ளார்.
இது குறித்து நாகேந்திரன் தெரிவிக்கையில் என்னுடைய தாய் கொல்லப்பட்டது எனக்கு தெரியாது என்றும். செல்வராஜ், வசந்தாமணி கொலைகூட எதிர்பாராமல் நடந்தது என கூறி தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.