என்னை கற்பழித்துவிட்டார்! பாஜக Ex எம்எல்ஏ மீது மருமகள் கூறிய அதிர வைக்கும் புகார்!

டெல்லியில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான மனோஜ் ஷோகீன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது மருமகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கடந்த புத்தாண்டுக்கு முதல்நாள் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒரு நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்றதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் வீடு திரும்பிய நிலையில் தனது கணவர் தனது நண்பர்களுடன் வெளியில் புறப்பட்டுச் சென்றதாகவும் தான் தூங்குவதற்காக தங்களது அறைக்கு சென்றதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

இந்நிலையில் நடு இரவில் அறை கதவை தட்டிய தனது மாமனார் தான் கதவைத் திறந்தபோது உள்ளே நுழைந்து தன்னை அத்துமீறி தொட்டதாகவும் தெரிவித்துள்ள அந்தப் பெண் அவர் குடிபோதையில் இருந்ததால் தான் அவரைச் சென்று உறங்கு மாறு கூறியதாகவும் ஆனால் துப்பாக்கியை எடுத்து மிரட்டியவர் தான் சத்தமிட்டால் புத்தாண்டுக்காக தங்கள் வீட்டுக்கு வந்திருந்த தனது சகோதரனை கொன்று விடுவதாக மாமனார் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார் இந்நிலையில் தனது திருமண வாழ்க்கையையும் தனது சகோதரனையும் காப்பாற்றிக் கொள்வதற்காக தான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார் எனினும் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே குடும்ப வன்முறை தொடர்பாக தனது மாமியார் குடும்பத்தினர் மீது தான் தொடர்ந்த ஒரு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார்.  

அப்போது தனது பெற்றோரை தனது மாமனார் தாக்கியதாகவும் அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் இந்நிலையில் குடும்ப வன்முறை வழக்கில் தனக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாக விசாரணை அதிகாரி தெரிவித்ததன் பேரில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடூரத்தையும் அவர் அப்போது தெரிவித்தார். இதையடுத்து பாஜக எம் எல் ஏ மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்