மதுரை அருகே திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் வீட்டு மருமகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தும் தனக்கு மாமனார் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கணவனுக்கு ஆண்மை இல்லை! அதனால் மாமனார்...! இளம் பெண் பகீர் பேட்டி!

புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத நிலையில் அப்பெண் மாதர் சங்கத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து மாதர் சங்கத்தினர் காவல்துறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த அமிர்தராஜ் என்பவருக்கும் புனிதபவானி என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சணைக்கு மேலாகவும் பெண் வீட்டார் கொடுத்து விட்டதாக தெரிகிறது. அதில் 40 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருள்களில் பெண் வீட்டிலிருந்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் அப்பெண்ணிடம் வீட்டிலிருந்து பணம் வாங்கி வருமாறு மாப்பிள்ளை வீட்டார் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. பின்னர் மாமனார் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்துவதாகவும் அப்பெண் புகார் அளித்துள்ளார். தன் கணவருக்கு ஆண்மை இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மாமனார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அப்பெண் மனமுடைந்து திருமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அப்பெண் இதுகுறித்து மாதர் சங்கத்தினர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒன்றுதிரண்ட மாதர் சங்கத்தினர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னரே அங்கு இருந்த கூட்டம் கலைந்து சென்றது.