50 வயதில் அழகாக இருக்கும் ஆண் தேவை! பெற்ற தாய்க்கு வாழ்க்கை துணை தேடும் இளம் பெண்! குவியும் லைக்ஸ்! ஏன் தெரியுமா?

தனது தாயின் திருமணத்திற்கு அழகான நபர் மணமகனாக வேண்டும் என மகள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது அதிக அளவு லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகளை பெற்று இணையதளத்தில் வைரலாகிவருகிறது.


இந்தியாவில் ஆஸ்தா வர்மா என்ற இளம்பெண் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாயுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் தனது தாய்க்கு 50 வயதான மணமகன் வேண்டுமென பதிவிட்டுள்ளார். தந்தை இறந்து சில ஆண்டுகள் ஆன நிலையில் தாயுடன் தனிமையில் வசித்து வருவதாகவும் தனது தாய்க்கு துணையாக அவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் சேர்ந்து வாழ 50 வயது மணமகன் தேவை என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் ,புகைப்பழக்கம் எதுவும் இருக்கக்கூடாது என நிபந்தனைகளை விதித்து பதிவிட்டுள்ளார். மேலும் அவர் சைவம் உணவு மட்டுமே சாப்பிடுபவராக இருக்க வேண்டும் எனவும் இளம்பெண் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவிற்கு 14000 லைக்குகள் மற்றும் சுமார் 4000 ஷேர்களை பெற்றோர் வைரலாகிவருகிறது.

இந்நிலையில் பலரும் நல்ல மணமகன் கிடைக்கும் எனவும் தங்களது வாழ்த்துக்களை கமெண்ட்டுகளாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது தாய்க்கு மணமகன் தேடும் மகளின் பணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.