தலித் மருமகனை மகள் முன்னிலையில் வெட்டி கூறு போட்ட மாமனார்! அதிர வைக்கும் காரணம்!

சூரத்: மேல் ஜாதிப் பெண்ணை திருமணம் செய்த குற்றத்திற்காக, தலித் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


குஜராத் மாநிலம், மண்டல் தாலுக்கா அருகில் உள்ள வர்மோர் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா. 22 வயதாகும் இந்த பெண், கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன வேன் டிரைவர் ஹரிஷ் சோலங்கி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

 இவர்கள் 2 பேரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி, கடந்த 8 மாதங்களாக தனித்து வசித்து வந்திருக்கிறார்கள். இதில், சோலங்கி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், ஊர்மிளா ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஊர்மிளா சமீபத்தில் கர்ப்பம் அடைந்துள்ளார். அவரை பார்க்க வருவதாகக் கூறி வந்த அவரது குடும்பத்தினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தலாம் என அழைப்பு விடுத்துள்ளனர். இதையேற்று, ஹரிஷ் சோலங்கி, அவர்களின் ஊருக்குச் சென்றபோது, அங்கே ஊர்மிளா குடும்பத்தினர் அவரது தலையை வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். அதேசமயம்,  ஊர்மிளாவை காணவில்லை எனக் கூறப்படுகிறது.