ஏய் அந்த ஜாதி தானடி நீ..? இங்க ஏன் வந்த? தலித் பெண் எம்எல்ஏவுக்கு விநாயகர் சதுர்த்தியில் நிகழ்ந்த கொடுமை!

ஆந்திராவில் விநாயகர் சிலையை பார்க்க சென்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் எம்எல்ஏ, சாதியின் பெயரால் இழிவுபடுத்தப்பட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் தாடி கொண்டா தொகுதியை சேர்ந்தவர் எம்எல்ஏ உண்டவல்லி ஸ்ரீதேவி. மடிகா எனப்படும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஆவார். மேலும் மருத்துவர் ஆவதற்கு பயிற்சியும் பெற்று வருகிறார்.  

இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக குண்டூர் மாவட்டத்தில் உள்ள அனந்தவரம் என்ற கிராமத்திற்குச் சென்று இருந்தார். அப்போது அவரைப் பார்த்த கிராம மக்கள் தங்கள் ஊரில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலையை பார்க்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

மக்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற உண்டவல்லி ஸ்ரீதேவி விநாயகர் சிலைக்கு தேங்காய் நீரை ஊற்றி வழிபட முற்பட்டார். அங்கு வந்த தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் கொம்மினேனி சிவாயா என்ற சவுத்ரி உயர் சமூகத்தைச் சேர்ந்த நபர், உண்டவல்லி ஸ்ரீதேவியை ஜாதியின் பெயரை சொல்லி திட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது. மடிகா சமூகத்தைச் சேர்ந்த உண்டவல்லி ஸ்ரீதேவியை யார் அழைத்தது என்று பிரச்சனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அவருடன் சேர்ந்து அவருடைய குடும்பத்தாரும் எம்எல்ஏவை வசை பாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து போலீசார் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். சிவாயா உள்பட நான்கு பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உண்டவல்லி ஸ்ரீதேவி, தாம் சாதிக் கொடுமையை அணிவிப்பது இதுதான் முதல் முறை என்று வருத்தம் தெரிவித்தார்.

தெலுங்குதேசம் கட்சியினர் இயற்கையாகவே சாதி வெறி பிடித்தவர்கள் என்பது உறுதியாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மக்கள் பிரதிநிதி

, ஜாதிக் கொடுமையை அனுபவிப்பது இது முதல்முறை அல்ல. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரவேலா கிஷோர் என்பவர் கடந்த ஆண்டு இதேபோன்று அவமானப்படுத்தப்பட்டார். அதன் பிறகு அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.