சென்னையில் இருந்து 1800கிமீ தொலைவில் புயல்! வேகமாக முன்னேறுகிறது!

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது


காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தற்போது மாறி உள்ளது,இன்று மாலையோ அல்லது நாளையோ அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது,  இதனால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அது புயலாக உருவாகி வட தமிழக கடல் பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது 

சென்னைக்கும் இந்திய பெருங்கடல் பகுதிக்கும் 1800 கிலோமீட்டர் தொலைவில் அந்த காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் 28, 29 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது