சென்னை மக்களே உஷார்! நாளை (17.08.2019) முழுவதும் எங்கெங்கு பவர் கட் தெரியுமா?

சென்னை மாநகராட்சியில் நாளை மின்வாரியத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை கீழ்க்கண்ட பகுதியில் நாளை (16.08.2019)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும் என மின்வாரியத் துறை தெரிவித்துள்ளது.


அடையார் மற்றும் பெசன்ட் நகர்: எல்லியம்மன் கோயில் வீதி, தாமோதரபுரம் மெயின் ரோடு, சாஸ்திரி நகர் பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும் மின்வாரிய அறிவித்துள்ளது.

வேளச்சேரி: வேளச்சேரியில் தாம்பரம் மெயின் ரோடு, 100 அடி பைபாஸ் ரோடு, தண்டீஸ்வரம் காலனி ,திரௌபதி அம்மன் கோவில் வீதி ,லட்சுமிபுரம் ,ஜானகிபுரம் வீதி, காந்தி சாலை, சேதுபதி நகர், ஜெயந்தி வீதி, ரவி வீதி ,சாந்தி வீதி போன்ற பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக காலை முதல் மாலை வரை மின்தடை இருக்கும் என மின்வாரிய துறை தெரிவித்துள்ளது.

ஈஞ்சம்பாக்கம் பகுதி: சமுத்திர சாலை, மற்றும் ராஜாஜி சாலை ,நைனா குப்பம் காலனி, மீனாட்சி ஃபார்ம், கண்ணகி வீதி, நிலா வீதி ஆகிய பகுதிகளில் நாளை மின்வெட்டு இருக்கும்.

திருவான்மையூர்: இந்திரா நகர் இரண்டாவது அவன்யு, இந்திரா நகர் நான்காவது மற்றும் பதிமூன்றாவது வீதி, சி எஸ் காலனி ஐஸ்வர்யா காலனி, இந்திரா நகர் எட்டாவது விதி, காமராஜ் நகர் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது விதி ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு காரணமாக மின் தடை இருக்கும் என மின்சாரத் துறை அறிவித்துள்ளது.