வயலில் கால் வைத்த 3 பேர்..! தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து உயிரிழந்த விபரீதம்..! ஒரே குடும்பத்தை சேர்ந்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

திருச்சி: வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி, நாவலூரை அடுத்த கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில்   நெல் பயிரிட்டு, விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், அவரது வயலில் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால், நீரில் மின்சாரம் பாய்ந்து ஆபத்தான சூழல் இருந்துள்ளது.

இதுதெரியாமல், ஆறுமுகத்தின் மனைவி ஒப்பாயி அம்மாள், மகன் ராமமூர்த்தி மற்றும்  பேரன் குணசேகரன் ஆகியோர், பயிருக்கு மருந்து தெளிக்க சென்றுள்ளனர். அப்போது மின்சாரம் பாய்ந்த வயலில் கால் வைத்ததும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் பற்றி ராம்ஜி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.