மெனோபாஸ் பெண்களுக்கு தயிர் மிகவும் நல்லது!! ஏன்னு தெரியுமா?

பருவம் அடைவது பெண்களுக்கு குதூகலம் கொடுப்பது போன்று மெனோபாஸ் பெண்களுக்கு கொஞ்சம் தர்மசங்கடத்தையே கொடுக்கிறது. தன்னுடன் இருந்த பெண்மையும், மென்மையும் தங்களைவிட்டு வெளியேறிவிட்டதாக நினைக்கிறார்கள். இது உண்மை அல்ல.


ஆம், பெண்ணுக்கு தாய்மை அடையும் வாய்ப்பு குறைந்திருக்கிறதே தவிர, வேறு எந்த வகையிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் கிடையாது. அதனால் மெனோபாஸ் காலங்களில் பெண்கள் அதிகம் தயிர் எடுத்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கப்பெற்று சந்தோஷமாக வாஅ முடியும்.

மேலும் தயிர் உடல் குளிர்ச்சியையும் நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது. தயிர் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில் 91% தயிர் ஜீரணமாகியிருக்கும். ஆனால் பால் சாப்பிட்டால் 32% மட்டுமே ஜீரணமாகியிருக்கும்.

தயிரில் LACTOBACIL இருக்கிறது, இது உடலில் ஜீரண சக்தியை அதிகரித்து வயிற்றில் உருவாகும் தேவையற்ற உபாதைகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லை என்றால் வெறும் தயிர் சாதமாவது உட்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்வயிற்றுபோக்கு இருந்தால் சிறிது வெந்தயம் + தயிர் 1 கப் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

பிரியாணி போன்ற உடலுக்கு சூடு அளிக்கும் உணவுகளை உட்கொள்ளும் பொழுது அவை வயிற்றுக்கு தீங்கு  ஏற்படாமல் இருக்கவே தயிர் வெங்காயம் எடுத்துக்கொள்கிறோம்