கடலூர் மாவட்டத்தில், துணைக் காவல் ஆய்வாளர் அவர்கள் என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளி வந்த நபருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று அபராதம் விதித்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
என்ஜினே இல்ல ஏட்டய்யா..! கதறிய இளைஞன்! ஆனாலும் கடமை தவறாத ஸ்ட்ரிக்ட் போலீஸ்! கடலூர் காமெடி!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் பணிபுரியும், சிறப்பு துணைக் காவல் ஆய்வாளர் தான் சக்திவேல்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சேத்தியாத்தோப்பில் சக்திவேல் மற்றும் மற்ற காவலர்வுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரத்தூரை சேர்ந்த தங்கவேல் என்பவர் என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்று கொண்டு இருந்தார்.
அதனை கண்ட சேத்தியாத்தோப்பின் சிறப்பு துணைக் காவல் ஆய்வாளர் ஆனா சக்திவேல், தங்கவேலை மறித்து ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று வினாவி உள்ளார் ஆய்வாளர். அதற்கு பதில் அளித்த தங்கவேல் தனது மோட்டார் சைக்கிள் பழுதாகி விட்டதாகவும், அதனால் மெக்கானிக் ஒருவர் வந்து என்ஜினை கழற்றி சென்று விட்டதாகவும், தான் அந்த கடைக்கு மோட்டார் சைக்கிளை தள்ளி செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சிறப்பு துணைக் காவல் ஆய்வாளர் சக்திவேல் அவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தங்கவேல், என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்ததற்கு எதற்காக அபராதம் செலுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் தங்கவேல், ஆய்வாளரிடம் பணம் இல்லை என்றும், அதனால் ‘இ-செலான்’ மூலம் ரசீது கொடுங்கள், தான் கோர்ட்டில் அல்லது தபால் நிலையத்துக்கு சென்று அபராதம் செலுத்தி விடுவதாக கூறினார்.
அதற்கு சக்திவேல், இ-செலான் எந்திரம் இல்லை என்றும், அதனால் ரசீது எழுதி கொடுப்பதாகவும் கூறினார்.
இந்த பிரச்சனையினால் தங்கவேலுவுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறப்பு துணைக் காவல் ஆய்வாளர் சக்திவேல், தங்கவேலை சமாதானப்படுத்தி அபராதம் செலுத்தி விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். பின்னர் தங்கவேல் ரூ.100 அபராதம் செலுத்தி விட்டு, மோட்டார் சைக்கிளை தள்ளி சென்றார்.
ஹெல்மெட் அணியவில்லை என்று என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்த நபருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது நெட்டிசன்கள் கடமை உணர்ச்சிக்கு அளவு இல்லை என்று கலாய்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.