கற்பழிப்புக் குற்றவாளி எம்.எல்.ஏ.வுடன் காட்சி தரும் மோடி, அமித்ஷா, யோகி! உன்னா விவகாரத்தில் நீதி கிடைக்குமா?

உத்திரப்பிரதேச மாநில எம்.எல்.எவான குல்தீப் செங்கார் என்பவர் ஒரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக 2017 ல் வழக்கு பதிவு செய்யப் பட்டது.


குல்தீப் சிங்கை பிஜேபி கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தது.இந்த நிலையில் கடந்த ஜூலை 28ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளானது அதில் அந்தப் பெண்ணின் இரண்டு அத்தைகள் மரணமடைந்தனர்.பெண்ணும் அவரது வக்கீலும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தும் குல்தீப் சிங்கின் கைவரிசைதான் என்று அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது சி.பி.ஐ.! இந்த நிலையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர் ஒன்றில் பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித் ஷா,உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்களுடன் கொலை,கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் குல்தீப் சிங் செங்கார் தன் மனைவியுடன் இருக்கும் பெரிய புகைப்படமும் இடம் பெற்றது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

அந்த பேனர் வைக்கபட்டு இருக்கும் பஞ்சாயத்தின் தலைவர் குல்தீப் சிங் செங்காரின் மனைவி சங்கீதா.அதனால் பஞ்சாயத்து தலைவரின் படத்துடன் அவரது கணவர் என்கிற முறையில் எம்.எல்.ஏ வின் படம் இடம் பெற்று இருக்கிறது என்று குல்தீப் தரப்பில் சொல்லப் படுகிறது. பிஜேபியின் ராகேஷ் திரிபாதி ,குல்தீப் சிங்மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது அவளவுதானே,அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் சொல்லி விடவில்லையே அதனால் அவர் படத்தை வைப்பதில் தவறில்லை என்கிறார்.