சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
சென்னையில் பதுங்கியிருந்த தீவிரவாதி! சிக்கிய திக்திக் நிமிடங்கள்!

அப்போது ஒரு இளைஞர் தான் உல்பா தீவிரவாதி என்று கூறி மற்றவர்களை மிரட்டி உள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு பிரிவு மேலாளர் ராமதாசு சமூக வலைதளங்களில் சோதித்த போது 2018 இல் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரை கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதி சென்னையில் கட்டப்பட்டுவந்த தனியார் மருத்துவமனையில் 6 மாதம் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.தீவிரவாதி பணிபுரிந்து வந்த மருத்துவமனையை அடுத்த வாரம் குடியரசு துணை தலைவர் திறந்து வைக்க உள்ளார். வேறு ஏதேனும் சதிதிட்டம் தீட்டப்பட்டு வந்ததா?என தீவிரவாதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதி உல்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.