மற்ற IPL டீம்களை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே ரசிகர்கள் மிக அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
கோவையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள்! கெத்து காட்ட தயாராகிறது சர்வதேச மைதானம்!
ஆனால் இவ்வளவு ரசிகர்களை கொண்ட தமிழ்நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் IPL போட்டிகள் அனைத்தும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமே நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து பாலாஜி, முரளி விஜய், அஸ்வின், சடகோபன் ரமேஷ், விஜய் ஷங்கர் என பல்வேறு திறமையான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் அளவிற்கு செல்ல முக்கிய காரணமாக அமைந்தது அவர்கள் விளையாடி பழகிய சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமே .
தமிழ்நாட்டில் இந்த ஒரு மைதானம் மட்டும் தான் சர்வதேச தரத்துடன் விளங்கியது. அனால் இப்போது மற்றுமொரு மைதானம் கோவை மாவட்டத்தில் சர்வதேச தரத்துடன் தயாராகி வருகிறது. இந்த மைதானத்தில் ஏற்கனவே ரஞ்சி ட்ராபி மற்றும் தமிழ்நாட்டு அளவில் விளையாடப்படும் டி என் பி எல் தொடர்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் கொண்டுள்ள அணைத்து விதமான வசதிகளும் நிறைந்துள்ளது. குறிப்பாக வலை பயிற்சி மேற்கொள்ள பிட்ச்களும், கிரிக்கெட் போட்டிகள் நடத்த சர்வதேச தரம் கொண்ட 3 பிட்ச்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த மைதானத்தில் சைடு ஸ்க்ரீன் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை போல பெவிலியன் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . ஆகையால் இந்த மைதானத்தில் அடுத்த வருடம் ipl போட்டிகள் நடத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்று அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது.
இந்த கிரிக்கெட் மைதானம் SNR ஆர்ட்ஸ் மற்றும் சைன்ஸ் கல்லாரி வளாகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல கோடி ருபாய் தயாரிக்கப்பட்ட இந்த மைதானம் கடந்த சில வருடங்களாக தயாரிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.