சுடச்சுட மாட்டு சாணத்தில் தயாராகும் கேக்! விலை ரூ.215! எங்கு தெரியுமா?

டெல்லி: அமெரிக்காவில் மாட்டுச் சாணி வரட்டிகள் அதிகளவில் விற்கப்படுவதாக, டிவிட்டரில் செய்தி பகிரப்படுகிறது.


இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர் Samar Halarnkar (@samar11) என்பவர் டிவிட்டரில்  ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மாட்டுச் சாணி வரட்டிகள் கேக் போல பாக்கெட் செய்யப்பட்டிருக்கும் புகைப்படத்தை இணைத்துள்ள அவர், ''எனது கஸின் இதை அனுப்பியுள்ளார். நியூ ஜெர்ஸியில் உள்ள எடிசன் எனும் மளிகைக் கடையில் 2.99 டாலர் விலைக்கு இதனை வாங்கியுள்ளார்.

இவை இந்தியாவை சேர்ந்த நாட்டுப் பசுக்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது அமெரிக்க எருமை மாடுகளிடம் இருந்து வாங்கப்பட்டதா என விவரம் தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்,'' எனக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரட்டி பாக்கெட்டில் 10 வரட்டிகள் இடம்பெற்றுள்ளன, அதன் மேலே, 'Cow Dung Cakes' என அச்சிடப்பட்டுள்ளது. குறிப்பாக,'இது சாப்பிட அல்ல, மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு,' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த பதிவை தொடர்ந்து டிவிட்டரில் மாட்டுச் சாணிக்கு உள்ள மவுசு பற்றியும், அமெரிக்காவில் கூட வரட்டி விற்கப்படும் அளவுக்கு நிலைமை உள்ளது பற்றியும் பலரும் காரசாரமாக விவாதிக்க தொடங்கியுள்ளனர்.