ஸ்டாலின் வாய்க்கு பூட்டு போட்ட நீதிமன்றம்..! இனியாவது திருந்துமா தி.மு.க..?

வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதை ஸ்டாலின் வழக்கமாக வைத்திருக்கிறார். தமிழக மக்களுக்காக அரசு எப்படியெல்லாம் உழைத்துவருகிறது என்பதை கண்டுகொள்ளாமல், எந்த ஒரு திட்டத்தையும் எதிர்ப்பதுடன் கடுமையான விமர்சனங்களையும் அவதூறுகளையும் பரப்பி வருகிறார் ஸ்டாலின்.


அதனால், தமிழக முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.

இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனக்கு எதிராக் தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்டாலின் பொது மேடைகளில் தமிழக முதல்வர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் குறித்து நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் குறித்து பேசிய கருத்துகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, லட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பை பெற்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், முதல்வர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.

மேலும், அரசியல் ஆதாயத்திற்காக மு.க.ஸ்டாலின் உட்பட மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் இது போன்ற தேவையற்ற கடுமையான வார்த்தைகளை பொது வெளியில் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்றும் நீதிபதி சதீஷ்குமார் அறிவுறுத்தினார்.

அதோடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டும். அதை விடுத்து, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இது போன்ற கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்வது பொதுமக்களிடையே தவறான தாக்கத்தை உருவாக்கும் என்று கண்டிப்பு காட்டியுள்ளார்.

இனியாவது ஸ்டாலின் திருந்தட்டும்.