அதிநவீன எந்திரத் துப்பாக்கிகளுடன் மணமேடைக்கு வந்த மணமக்கள்..! பார்த்து அதிர்ச்சியில் உறைந்த உறவுகள்! ஏன் தெரியுமா?

நாகாலாந்து மாநிலத்தில் கிளர்ச்சித் தலைவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் கையில் துப்பாக்கியுடன் இருந்த புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.


வடகிழக்கு மாநிலங்களில் நாகா குழுக்களுடன் வரலாற்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் வரையில் இதுபோன்ற புகைப்படம் பலரையும் பேசவைத்துள்ளது.  

நாகாலாந்து ஒருங்கிணைப்பின் தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் தலைவரான போஹோட்டோ கிபாவின் மகன் சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். அதில் ஏ.கே .56 மற்றும் எம் 16 தானியங்கி துப்பாக்கிகளுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நின்றுகொண்டிருக்கிறார். நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமண வரவேற்பறையில் விருந்தினர்களும் துப்பாக்கிகளுடன் வந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

"மணமகனும், மணமகளும் தானியங்கி துப்பாக்கிகளுடன் இருப்பது போல் எந்த படமும் செய்தி ஊடகங்களில் வெளியாகவில்லை என நாகாலாந்து காவல்துறைத் தலைவர் டி ஜான் லாங்க்குமர் கூறினார்.

நாகா தேசிய அரசியல் குழுக்களின் கூட்டாக அமைக்கும் 7 நாகா கிளர்ச்சிக் குழுக்களில் என்.எஸ்.சி.என்-யு ஒன்றாகும். அவை மத்திய அரசுடன் சமாதான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துகின்றன. நாகலிம் சோசலிஸ்ட் கவுன்சில் மற்றும் மியான்மரை தளமாகக் கொண்ட நாகாலாந்து-கப்லாங்கின் சோசலிஸ்ட் கவுன்சில் ஆகியவற்றின் பிரிந்த தலைவர்களால் 2007 நவம்பர் 23 அன்று NSCN-U உருவாக்கப்பட்டது.