டேபிள் மீது கத்தை கத்தையாக பணம்..! வாடிக்கையாளரின் ஆசையை தூண்டி..! கணவன் மனைவி செய்த பகீர் செயல்! சேலம் திகுதிகு!

சேலத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இரட்டிப்பாக பணம் திரும்ப கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி ஜோடியாக 100 கோடி வரை ஆட்டையை போட்டு வீட்டு கம்பி நீட்டியவர்கள் இரண்டு வருடம் பிறகு கைது ஆன சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.


சேலம் ரெட்டிபட்டியில் மணிவண்ணன் (38 வயது) மனைவி இந்துமதி (33வயது ) இருவரும் தனது உறவினர்களுடன் சேர்ந்து நடத்தி வந்த முதலீட்டு நிறுவனத்தில், அதிக பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு சொகுசு கார், உல்லாச சுற்றுலா என கவர்ச்சிதான ஆபர்களை அறிமுகம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்த மணிவண்ணன். 

ஆரம்பத்தில் முதலீடு செய்த சிலருக்கு அவர்கள் சொன்னது போலவே இரட்டிப்பான தொகையை கொடுத்து விட அதை நம்பி பணத்தை கோடி கணக்கில் முதலீடு செய்ய குன் வந்தனர் அப்பகுதி மக்கள். சேலம் ஓமலூர் பகுதியில் செயல்பட்டு வந்த அந்த அலுவலகத்தில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலை மோத முதலீடு தொகையும் அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. 

இந்த நிலையில் சேலம் சுற்று வட்டார பகுதியில் சுமார் 100 கோடி வரையில் வசூலை பார்த்த தம்பதியினர் இரவோடு இரவாக கம்பி நீட்டி விட,        பணத்தை பறிகொடுத்த மக்கள் பதறி போனாரகள், இதற்கிடையில் வெளி நாட்டில் தலைமறைவாக இருந்த தம்பதியினர்தான் , இரண்டு வருடம் கழித்து சேலத்திற்க்கு திரும்பி உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் 

போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர், அவர்கள் ஏமாற்றி பணத்தை கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்ததுடன், சென்னையில் பல பகுதிகளில் நிலம் மற்றும்.வீடுகளை வாங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் தம்பதியை சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அவர்களது உறவினர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.