திருமணமான கையோடு மனைவியை அழைத்துக் கொண்டு ஸ்கூலுக்கு போன கணவன்! நெகிழ வைக்கும் காரணம்!

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர் தனது திருமணம் முடித்த கையோடு அரசு பள்ளிக்கு சென்று உதவியது பள்ளியையும், உறவினர்களையும் நெகிழச் செய்துள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் காட்டுநாவல் கிராமத்தில் பிரபு வசித்து வருகிறார். இவர் தற்போது சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவருக்கு திருமணம் கண்ணகி எனும் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்க பட்டதால், விடுப்பு எடுத்து சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று பிரபு-கண்ணகி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. முடிந்த உடன் அடுத்த நிமிடமே வீட்டிற்கு செல்லாமல், பிரபு தான் படித்த நடுநிலை பள்ளிக்கு சென்று மாணவர்களின் படிப்பிற்க்காக பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கி தந்துள்ளார். குறிப்பாக, எழுதுவதற்கு வெண்திரை ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த பிரபு, என்னுடன் இதே பள்ளியில் படித்த நண்பர் ஒருவர் நான் சிங்கப்பூரில் இருக்கையில், பள்ளியின் நிலை குறித்து கூறி உதவி கேட்டிருந்தார். குறிப்பாக வெண்திரை ஒன்று வேண்டுமே கோரிக்கை விடுத்தார். நான் ஊருக்கு வரும்போது உதவுவதாக கூறினேன். அதை இப்போது நிறைவேற்றினேன். நான் படித்த பள்ளிக்கு உதவுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்றார்.