காமராஜ் சொன்னதைக் கேட்டு நடந்தா நாடு உருப்படுமே!

காமராஜருக்கு மேடைப் பேச்சு தெரியாது. தன்னுடைய பாணியில் இயல்பாக பேசக்கூடியவர். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கும். இதோ, காமராஜரின் வார்த்தைகளில் சில தெறிப்புகள்


*  நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்

* அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது

* படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. 

*  மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.

* ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

* சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்

* சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை

* தாய்மார்  கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது

* பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும் தேசமே முன்னேறும்

* நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும் இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது

* லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.

* நாம் எதைச் செய்தாலும் ஏன் அதைச் செய்கிறோம் என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்