விவசாய நிலத்தில் நாட்டு வெடிகுண்டு, விபரம் தெரியாமல் எடுத்த விவசாய தம்பதிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

ஆம்பூர் ஆகஸ்ட் 08 :வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெள்ளக்கல் பகுதியில்


ஆம்பூர் ஆகஸ்ட் 08 :வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெள்ளக்கல் பகுதியில் வசித்து வருபவர் குமரேசன் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோர் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர் இன்று மாலை அவர்களுடைய நிலத்தில் அறுவடை செய்த முள்ளங்கிகளை வீட்டில் வைத்து விட்டு அவர்களுக்கு சொந்தமான 4 மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதியில் விடப்பட்டிருந்தது பசு மாடுகளை அழைத்து வர அங்கு சென்ற குமரேசன்.

வனப்பகுதியில் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் வீட்டிற்கு எடுத்து வந்து அதை பிரித்து போது வெடித்து சிதறி உள்ளது அப்போது அருகாமையில் இருந்த குமரேசனின் மனைவி கவிதா பலத்த காயம் ஏற்பட்டதோடு குமரேசன் இரு கை மற்றும் கண்களில் காயங்கள் ஏற்பட்டது அது தொடர்ந்து இருவரும் மயங்கி விழுந்த படி இருந்ததால். அருகில் இருந்த விவசாய நிலத்தில் பணியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வீட்டின் அருகாமையில் இருந்த பொருட்கள் மற்றும் வீட்டின் ஜன்னல்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடி குண்டு வெடித்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளன.