திடீர் தடுமாற்றம்! தவறி விழுந்த பிரதமர் மோடி! இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதருக்கு இப்படி ஒரு நிலையா? வைரல் வீடியோ உள்ளே!

கான்பூர்: படிக்கட்டில் ஏறும்போது பிரதமர் மோடி தடுக்கி விழுந்தார்.


உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, சந்திரசேகர் ஆசாத் வேளாண் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

இதில் பங்கேற்ற பிரதமர் மோடி கங்கை நதியில் படகில் சிறிது தொலைவு பயணம் சென்றார். பின்னர், அங்கிருந்து திரும்பி, தரையில் இறங்கி நடந்தபோது திடீரென படிக்கட்டுகளில் தடுக்கி விழுந்தார். அவரை உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் கைகொடுத்து எழுப்பிவிட்டனர். எனினும், அவருக்கு  அடி எதுவும் படவில்லை.  

இதற்கிடையே, மோடி கீழே விழுந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து சமூக ஊடகங்களில் பலரும் கேலி, கிண்டல் செய்து மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். நாட்டின் பொருளாதாரம் எப்படி விழுந்ததோ, அதேபோல மோடியும் விழுந்துவிட்டார் என பலரும் விமர்சித்துள்ளனர். இதற்கு மோடி ஆதரவாளர்கள் வரிந்துகட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதால், சமூக ஊடகங்களில் ஒரேபரபரப்பு நிலவுகிறது.