திடீரென்று குறையும் கொரோனா வேகம்... சீனாவில் நடக்கும் அதிசயம்..

சீனாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைகிறது. இதன் பின்னணியைப் பற்றி பார்ப்போம்.


சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அதிக அளவு மக்களை கொன்று குவித்தது. இப்பொழுது சீனாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைகிறது. இதற்கு என்ன காரணம் என்று தற்போது வெளியாகி உள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. முதலில் மத்திய சீனா ஹாங்காங் பகுதியில் இந்த வைரஸ் பரவி வந்தது. முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் வுஹன் நகரத்தில் உருவானது. 

அங்கு இருக்கும் மீன் மார்க்கெட்டில் இருந்து உருவாகி இருக்கலாம் எனவும் அதுவும் கூட உறுதியாகச் சொல்லப்படவில்லை. சீனாவில் இருக்கும் ஹுபேய் மாகாணத்தில் 45 சதவீதம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.

தினமும் 400 - 500 பேர் என்று பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 70 - 120 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று விவரம் வெளியாகியுள்ளது. உலக சுகாதார மையத்தின் மூத்த மருத்துவ ஆராய்ச்சியாளர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா போருக்கு இணையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நகரத்தையும் மொத்தமாக மூடினார்கள்.சீனாவின் மற்ற பகுதிகளில் இருக்கும் மருந்துகளும் ஒரே இடத்திற்கு கொண்டு வந்தார்கள். ரயிலில் மருத்துவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். மருத்துவர்களும் தாமாக முன் வந்து சிகிச்சை அளித்தார்கள்.

இதனால் சீனாவில் 30 மாகாணங்கள் காப்பாற்றப்பட்டது. அங்கு எல்லா நிகழ்வும் தடைசெய்யப்பட்டது. மக்கள் யாரும் வெளியே அனுமதிக்கப்படவில்லை. பல நாடுகளில் இருந்து மருந்து பொருட்கள் இறக்கப்பட்டது. மிக வேகமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிசிடிவி மற்றும் ட்ரோன்கள் மூலம் மக்கள் கடுமையாக கண்காணிக்க பட்டார்கள்.

நோய் பாதித்தவர்களை அடுத்த நொடி யோசிக்காமல் கைது செய்தார்கள் இதற்கு ராணுவமும் உதவி செய்தது. நோய் குறித்த தகவல்களை தெரிவிக்க உளவுத்துறை பயன்படுத்தப்பட்டது. இத்தனை நடவடிக்கைகளை கையாண்ட பின்பு சீனாவில் கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்தது உள்ளே இருக்கும் நபர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை மற்ற நாடுகளில் செயல்படுத்த வாய்ப்பு குறைவு என்றும் இது போன்ற தீவிர செயல்பாடுகளை கடைப்பிடிப்பது கடினம் என்றும் கூறுகிறார்கள்.