கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் கோவிட் எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதலால்.
இந்தியாவில் தனது முதல் விக்கெட்டை வெற்றிகரமாக வீழ்த்தியது கொரோனா வைரஸ்!

உலகம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் மட்டும் தென்னிந்தியாவில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது.
இதில் கேரளாவைச் சேர்ந்த 3 பேர், நாட்டில் 65க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாக கூறினாலும் இதுவரையில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தது மத்திய சுகாதார துறை. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கல்புர்கி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் இன்று காலை மரணமடைந்துள்ளார்.
இதன் மூலம் இந்த வைரஸ் தாக்குதலில் முதல் மனித உயிரிழப்பை சந்தித்துள்ளது கர்நாடகம். மேலும் இந்த மரணம் பற்றிய தகவல்கள் நாடு முழுவதும் பரவி வருவதால். கடும் அச்சத்தில ஆழ்ந்துள்ளது மாநில சுகாதாரத் துறை.
இந்த வைரஸ் பாதிப்பின் விரியம் பரவி வருவதன் காரணமாக. வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை புஸ்ஸென ஆனது. தெருக்களில் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா பரவக் கூடும் என்பதால் அரசியல் தலைவர்கள் இந்த கொண்டாட்டங்களை முற்றிலுமாக புறக்கணித்தனர். ஆன்மீக பூமி என்று அழைக்கப்படும் இந்தியாவில். கடந்த சில ஆண்டுகளாக இந்துத்துவம் சார்பான பல அழுத்துங்களும். கடவுள் பக்திகளைப் பற்றிய தகவல்களும் பரப்பப்பட்டு வந்த இந்த வேளையில்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மத ஆலையங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மேலும் சளி இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று பகிரங்கமாக அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளன கோவில் நிர்வாகங்கள். மனிதனின் ஆறாவது சக்திக்கு அப்பாற்பட்டது கடவுள் என்று பல காலமாக சாஸ்திர சம்பிரதாயங்களை பரப்பி வந்த சில மதவாதிகளுக்கு. அறிவியல் மற்றும் விஞ்ஞானத்திற்கு இணை ஏதும் இல்லை என்று சொல்லாமல் சொல்லி உள்ளது இந்த கொரோனா வைரஸ்.
இந்த நிலையில். கர்நாடகாவில் உயிரிழந்த அந்த முதியவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன மாநில நிர்வாகத் துறை. இதோ வருகிறது. அதோ வருகிறது என்று புலி வரும் கதையாக பேசப்பட்டு வந்த வைரஸ் தாக்குதல். தனது முதல் வெற்றியை தென்னிந்திய தலைநகரம் கர்நாடகாவில் இருந்து தொடங்கியுள்ளது.
ஏற்கனவே கேரளா மற்றும் கர்நாடகாவில் இதன் பாதிப்புகள் அதிகம் உள்ளதால். விரைவில் தமிழகத்தில் இந்த வைரஸ் தாக்குதல் பரவ வாய்ப்புள்ளதால் தமிழக சுகாதாரத் துறை சுறுசுறுப்பாக வேலை செய்து வருகிறது.
மணியன் கலியமூர்த்தி