கொரோனா வைரஸை விட இப்போது போனை தொடுவதற்குத்தான் பயமா இருக்கிறது. ஆம், யாருக்கு போன் செய்தாலும் லொக், லொக் என ஆரம்பித்து கொரோனா விழிப்புணர்வு விளம்பரம் மளமளவென ஓடுகிறது.
லொக்... லொக்... தமிழ்ல பேசுங்கடா... போனை தொடவே பயமா இருக்குது.
ஆனால், என்ன விளம்பரம் என்பதுதான் யாருக்கும் புரியவில்லை. ஆம், ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் முழுதாக ஓடி முடிந்த பிறகுதான் நாம கூப்பிடும் நபருக்கு ரிங் போகவே செய்கிறது. அதுவரை அவர் வேறொருவருடன் பேசிக் கொண்டிருக்கிறாரா அல்லது போனை வைத்துவிட்டு ஓடிவிட்டாரா என்பதே புரியவில்லை.
கொரோனா வைரஸ் பயங்கரமானதாகவே இருக்கட்டும். ஆனா, அதுக்காக அரசு கொடுக்கும் பில்டப் பயங்கர கொடுமையாக இருக்கிறது. என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியாமல் எப்படி விழிப்புணர்வு வரும்.
ஆமா, இந்த விளம்பரத்துக்கு ஐடியா கொடுத்தவருக்கு, அது தமிழில் இருக்க வேண்டும் என்றுகூடவா தெரியாது. அந்தந்த ஏரியாவுக்கு ஏற்ப பிராந்திய மொழியிலாவது சொல்லுங்கள். அல்லது எல்லோருக்கும் கொரோனா வைரஸை போனிலேயே அனுப்பி கொல்லுங்க.
தாங்க முடியலையே சாமி.