இப்போது கொரொனா பாதிப்பைக் கண்டறியும் மருத்துவமனைகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளன. அவற்றில் கொரோனா பாதிப்பைக் கண்டறிந்து தகவல் சொல்ல, 24 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறதென புகார் வருகிறது.
கொரோனாவுக்கு 30 நிமிடத்தில் டெஸ்ட்..! எடப்பாடி சொல்வது உண்மைதானா..?

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 30 நிமிடத்தில் கொரோனா டெஸ்ட் குறித்து கண்டறிந்தும் சாதனங்கள் 1 லட்சம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், 9ம் தேதி சென்னைக்கு வந்துவிடும் என்றும் 10ம் தேதி முதல் அதிரடி ஆய்வுகள் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரிக்கிறது. மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
மேலும், தற்போது 3,371 வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. கூடுதலாக 1,000 வெண்டிலேட்டர்கள் வாங்கப்படுகிறது…” என்றும் தெரிவித்துள்ளார்.
அரை மணி நேரத்தில் கொரோனாவை கண்டறிய முடியுமா என்று பலர் சந்தேகம் தெரிவித்தாலும், அப்படியொரு சாதனம் வரும்பட்சத்தில், தமிழகத்துக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்.