எங்கோ போகும் கொரோனா கொள்ளை நோய்- பலி 30!

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை இல்லாத அளவாக ஒரு நாளில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,989 என்றும் சென்னையில் மட்டும் 1,487 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் நலவாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.


கொரோனாவால் இதுவரை மாநிலத்தில் 42,687 பாதிக்கப்பட்டுள்ளனர்; 397 பேர் இறந்துபோயுள்ளனர். 23,409 பேர் குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். . தலைநகர் சென்னையில் மட்டும் இதுவரை 30, 444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 316 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 18 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவந்தனர். .

இன்று மட்டும் 16, 320 பேருக்கு 17,911 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. ... உயிரிழந்தவர்களில் நாள்பட்ட கோளாறுகள் எதுவுமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றவர்கள் இருவர். ஒருவருக்கு 70 வயது, இன்னொருவருக்கு 76 வயது. ....

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 57 வயதுடைய ஒருவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 54, 55, 56 வயது கொண்ட மூவரும் நாள்பட்ட நலிவு ஏதுமின்றி உயிர் இழந்துள்ளனர்.