காய்ச்சல் வந்துவிடுமோ என்ற காய்ச்சல் உஷார்..! கொரோனா கால எச்சரிக்கை.

சமீபத்தில் மருத்துவர் ஒருவர் கூறியிருக்கும் கருத்து பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.


அதாவது, ’நிறைய பேர் எனக்கு காய்ச்சல் என்று வருகிறார்கள். அவர்களை சோதித்தால் காய்ச்சல் இருப்பதில்லை. மன உளைச்சலே காரணம். 20 சதவீதம் மருந்து. 80 சதவீதம் தைரியம் வேண்டும்” என்கிறார்.

ஆம், காய்ச்சல் இல்லாமலே பலரும் காய்ச்சல்காரர்கள் போலவே நடந்துகொள்கிறார்கள். தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். கொரோனா செக்கப் செய்துகொண்டால், தனிமையில் அடைத்துவிடுவார்கள், யாரும் பார்க்க முடியாது, செத்தாலும் குடும்பத்துக்குத் தெரியாது என்று பயந்துபோய் அளவுக்கு அதிகமாக தனிமையை கடைப்பிடிக்கின்றனர். 

இவர்களுக்கு சொல்லிக்கொள்வது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். காய்ச்சலைவிட அபாயகரமானது காய்ச்சல் இருக்கிறது என்ற பயம். அதனால், காய்ச்சல் என்று தோன்றினால், வீட்டிலேயே தெர்மா மீட்டர் வாங்கி பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால், அருகிலுள்ள மருத்துவரை அணுகி முழு பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

பயந்துகொண்டே இருந்தால், உங்கள் பயம் வீட்டில் உள்ள மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும். அதன்பிறகு எல்லாமே பயமாகிவிடும். வாழ்க்கையும் முடிந்துவிடும்.

அதனால், எச்சரிக்கை அவசியம்தான். ஆனால், எச்சரிக்கையே பயப்படும் அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டியதில்லை.