பங்கு சந்தையை விடாமல் மிரட்டிவரும் கொரோனா..! இன்றும் மளமள வீழ்ச்சி

கொரோனா அச்சுறுத்தலால் உலகப் பொருளாதாராம் முடங்கி வருவதை அடுத்து. இந்திய பங்குச் சந்தை கடந்த 12 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பெரும் சரிவை சரிந்து வருகிறது. இதனால் தினமும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் முதலீட்டாளர்கள் .


இந்திய பங்குச் சந்தை கடந்த ஒரு மாதமாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இதுவரை 45 லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டு இழப்பை சந்தித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு. சரிந்து வரும் உள்நாட்டு வளர்ச்சி. அதிகரித்துவரும் வேலையிழப்புகள் மற்றும் சர்வதேச பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதன் காரணமாக. இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2008ம் ஆண்டுக்கு பிறகு ஜப்பானின் நிக்கி, மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதுது. தென் கொரியாவின், கோஸ்பி,ஹாங்காங்கின் ஹேங் செங், சீனாவின் ஷாங்காய், டோவ் ஜோன்ஸ், நாஸ்டாக் என உலகில் உள்ள அனைத்து பங்குச் சந்தை வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கடந்த ஜனவரி மாதம் 40,000க்கு மேல் இருந்தது. ஆனால் தற்போது 28 ஆயிரத்திற்கும் கீழே வந்துவிட்டது. மேலும் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் சரிந்து வருவதால் அதில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதால். மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட எஸ்பிஐ கார்டு நிறுவனத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

சௌதி அரேபியா மற்றும் ரஷ்யா தலைமையிலான ஓபெக் நாடுகளில் ஏற்பட்டுள்ள எண்ணெய் வர்த்தக பிரச்சினை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பேரல் 28 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த புதன்கிழமை வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தை நிஃப்டியில் பட்டியலிடப்பட்ட இண்டஸ்இன்ட் வங்கி 32 சதவீத இழப்பை சந்தித்தது. பாரதி இன்ஃப்ராடெல், பஜாஜ் பைனான்ஸ், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் பேங்க், பஜாய் பின்சர்வ், கோட்டக் மகேந்திரா வங்கி, ஜே.எஸ். டபிள்யூ., ஹீரோ மோட்டோ கார்ப், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றின் பங்குகள் 6 முதல்17 சதவீதம் வரை சரிந்தன. 

இந்நிலையில் வியாழக்கிழமை இன்று காலை தொடக்கத்திலேயே மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிந்தது.  தேசிய பங்குச் சந்தை நிஃப்டி கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 500 புள்ளிகள் குறைந்து 7900 புள்ளிக்கு சென்றது. இன்னும் சில நாட்கள் இதே நிலை நீடித்தால். ஒட்டுமொத்த இந்திய பங்குச் சந்தை முழுமையாக சரிவடைந்து. உள்நாட்டு பொருளாதாரத்தை மட்டுமின்றி மக்களின் சராசரி வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விடும் என்று அச்சம் கொள்கின்றனர் நிபுணர்களும் பொது மக்களுக்கும்.

அரசு எடுத்து வரும் எந்த நடவடிக்கையும் இதுவரை சரியாக செயல்படவில்லை எனவும். இதற்கு பிறகாவது அரசு விழிப்புடன் செயல்பட்டு சரிவடையும் பொருளாதாரத்தை உயர்த்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது ஆசிய வர்த்தக கூட்டமைப்பு.