திடீரென பிரேக் போட்டு வேகத்தை குறைத்த லாரி! அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்! 2 பேர் பலியான பரிதாபம்!

பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று வேகத்தை குறைத்ததால் பின்னே வந்த 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.


பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று வந்த நிலையில் முன்னே சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று வேகத்தை குறைத்தால் பின்னே வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி பி கே டிராவல்ஸ் தனியார் நிறுவனம் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது அதற்கு முன்னால் கண்டெய்னர் லாரி சென்றது இந்நிலையில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் திடீரென தனது வாகனத்தை இடதுபுறம் நிறுத்த வேகத்தை குறைத்து உள்ளார். பின்னே வந்த பஸ் டிரைவர் அதை பார்க்காமல் சீரான வேகத்தில் வந்து கண்டெய்னர் லாரி மீது மோதியுள்ளார்.

அதைப்பார்த்த அதன் பின்னால் வந்த டேங்கர் லாரி ஓட்டுனர் வேகத்தை குறைத்தால் அவருக்கு பின்னால் வந்த வாகனம் டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் அதற்குப் பின்னால் வந்தார் தேனி மற்றும் அறந்தாங்கி செல்லும் அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு நின்றன.

இந்நிலையில் தேனி பஸ்சில் இருந்த டிரைவர் மற்றும் அவரது பின்னால் அமர்ந்திருந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்நிலையில் பேருந்தில் இருந்தவர்களுக்கு சிறு சிறு காயங்களுடன் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்நிலையில் பின்னே வந்த வாகனங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அங்கேயே நின்றவாறு போக்குவரத்து நெரிசல் நிலவியது. 

இந்த விபத்து குறித்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் காயம் பட்டவர்களுக்கு முதலுதவி அளித்து அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தாமல் சென்று விட்டார் அதனால் அந்த கண்டெய்னர் லாரியின் நம்பர் மற்றும் அடையாளங்களை மற்றவர்களால் பார்க்க முடியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு செல்ல வேண்டும் இடைவெளி விடாமல் சென்றால் இந்த மாதிரியான விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. என போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் மற்றும் பதற்றம் நிலவியது.