கின்னஸ் சாதனையில் காங்கிரஸ் திருநாவுக்கரசர்! அதிர்ச்சியடைந்த ராகுல் காந்தி!!

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தலைமை வகித்த திருநாவுக்கரசரை கஷ்டப்பட்டு அசைத்து வெளியேற்றியது ஸ்டாலின். அதனால்தான் தி.மு.க.வுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி 10 சீட்டுகளையும் வென்றது.


கட்சிப் பதவியை பறிகொடுத்த திருநாவுக்கரசருக்கு, பரிதாபப்பட்டு திருச்சி தொகுதியை ஒதுக்கினார் ராகுல்காந்தி. அவரும் காங்கிரஸ் ஆட்களைக் கண்டுகொள்ளாமல் தி.மு.க. துணையுடன் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார்.

இப்போது கை சின்னத்தில் போட்டியிடும் திருநாவுக்கரசர், இதுவரை ஐந்து கட்சியில் உறுப்பினராக இருந்து, ஏழு சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறார் என்று ஆதாரபூர்வமாக அ.தி.மு.க. ஐ.டி. விங்க் தகவல் அனுப்பி வைரல் ஆக்கிவருகிறது.

இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ராகுல் செம அப்செட். என்ன செய்வது இனிமே வேற ஆளை மாத்தவும் நேரம் இல்லையே... இதோ அரசரின் சாதனைப் பட்டியல்

1977 - அறந்தாங்கி - இரட்டை இலை

1980- அறந்தாங்கி - இரட்டை இலை

1984- எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்து - சேவல்

1989 - அறந்தாங்கியில் சுயேச்சையாக - குடை சின்னம்

1991 - அறந்தாங்கியில் சுயேச்சையாக - மாம்பழம் (திமுகவுடன் கூட்டணி)

1996 - அதிமுகவில் இணைந்து அறந்தாங்கியில் போட்டி - இரட்டை இலை

1999 - லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக புதுக்கோட்டையில் வெற்றி - மோதிரம் (திமுகவுடன் கூட்டணி வைத்து)

2009 - பாஜக வேட்பாளராக ராமநாதபுரத்தில் - தாமரை தோல்வி

தற்போது 2019 - கை சின்னத்தில் திருச்சியில் போட்டி. இத்தனை கட்சி மாறி, இத்தனை சின்னங்களில் போட்டியிட்டு சாதனை புரிந்த திருநாவுக்கரசர் பெயர் கின்னஸில் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை.