என்னை கொலை செய்ய விரும்புகிறது காங்கிரஸ்! மோடி வெளியிட்ட திடுக் தகவல்!

தன்னை மிக அதிகமாக இருக்கும் காங்கிரஸ் தான் கொலை செய்யப்பட வேண்டும் என்றும் விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


அண்மையில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தேர்தலின் போது பிரதமர் மோடியை ஒரு பங்காக கருதி அவரை ஓங்கி அடிக்க வேண்டும் என்றும் அந்த பந்து சிக்ஸராக இந்திய எல்லை தாண்டி பாகிஸ்தானில் விழ வேண்டும் என்றும் அதன் பிறகு அங்கேயே மோடி சாக வேண்டும் என்றும் அந்த காங்கிரஸ் தலைவர் கூறியிருந்தார்.

இதனைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் என்று பேசினார். போபாலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, தன்னை காங்கிரஸ் கட்சி மிகவும் வெறுப்பதாகக் கூறினார். அதுமட்டுமல்லாமல் தான் தற்போது கொலை செய்யப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி நினைக்க ஆரம்பித்து விட்டதாக மோடி நிகழ் கிளப்பினார்.

ஒரு நாட்டின் பிரதமரையே கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் கட்சியை நீங்கள் ஆதரிக்கப் போகிறார்கள் என்றும் மக்களை நோக்கி அவர் கேட்டார். மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

யாரோ ஒரு மூன்றாம் கட்ட நிர்வாகி பேசியதை ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியை ஒப்பிட்டு மோடி பேசி இருக்கக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது.