நாங்குநேரியில் சரண்டர் ஆன காங்கிரஸ்! அடுத்த சுற்றுகளிலும் அ.தி.மு.க. வெற்றிமுகம்!

காங்கிரஸ் கோட்டை என்று கருதப்பட்ட நாங்குநேரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார்.


முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில், இரண்டாம் எண்ணிக்கை சுற்றும் தாமதமாகவே தொடங்கியது. அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முதல் சுற்றில் 4,407 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 2,275 வாக்குகளும் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில் அடுத்தகட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி அ.தி.மு.க. வேட்பாளர் 6,756 வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளர் 4,700 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்த நிலவரமே மற்ற சுற்றுக்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.