நாகூரா? நாக்பூரா? பாவம் அவரே கண்பியூஸ் ஆகி ராகுல் மானத்தை வாங்கிய இளங்கோவன்!

வர போகிற நாடாளுமன்றம் தேர்தலை ஒட்டி பல காட்சிகள் தங்களின் பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் உள்ள பெரிய சவாலே மொழி பிரச்னை தான்.


அதாவது ராகுல் காந்தி ,  மோடி போன்ற தலைவர்கள் ஹிந்தியில் பேசும் வாக்கியங்களை தமிழில்  மொழிமாற்றம் செய்வதில் பல குளறுபடி நடைபெறுகிறது.  தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவரான  ராகுல் காந்தி இந்த பிரெச்சனையை சந்தித்து வருகிறார்.

மொழி பெயர்ப்பு செய்பவர்கள் தங்களுக்கு ஏற்ற வார்த்தைகளை இடையில் சேர்த்து கூறிவிடுகின்றனர், இதனால் தலைவர்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகின்றனர்.  தற்போது அனைத்து  மக்களும் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வுடன் செயல் பட ஆரம்பித்துவிட்டனர்.  இதனால் இந்த மொழி பெயர்ப்பாளர் செய்யும் லீலைகள் எளிதில் மக்களுக்கு போய் சேர்ந்துவிடுகிறது.

ராகுல் காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பிரச்சாரம் செய்த போது, தங்கபாலு அதனை அவரது சொந்த வார்த்தைகளை சேர்த்து கொண்டு மொழிபெயர்ப்பு செய்தார்.  பின்பு இது பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.  இதற்கான மீம்ஸ்களுக்கும் சற்றும் குறைவில்லாமல் தீயாய் பறந்தது.

இதனையடுத்து  இன்று காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் இன்று க்ரிஷ்னகிரியில் நடைபெற்றது அதில் முன்னாள் பேராசிரியர் பழனிதுரை என்பவர் மொழிப்பெயர்ப்பாளராக செயல்பட்டார். இவரும் தங்கபாலுவை போல் மாற்றி மாற்றி  மொழிபெயர்ப்பு செய்தார்.  

இதனை பார்த்த ராகுல் சேலத்தில் தற்போது நடைபெறும் பிரச்சாரத்திற்கு வேறு ஒருவரை நியமிக்கும் படி கூறினார்.  அதனால் பிரசாரக்கூட்டத்தில் டி.கே.எஸ் இளங்கோவன் டிரான்ஸ்லேட் செய்தார்.  இவரும் இதற்கு விதிவிலக்கா என்ன?

ராகுல் காந்தி பேசும் போது , தமிழகத்தை நாக்பூரில் இருந்து பாஜக ஆட்சி செய்ய நினைக்கிறது என்றார். அதற்கு டி.கே.எஸ் இளங்கோவன் நாகூரில் இருந்து பாஜக ஆட்சி செய்ய உள்ளது என தவறாக மொழி மாற்றம் செய்தார்.  இதனை ராகுல்   உடனே கவனித்து அவரை  முறைத்து பார்த்து பின்பு மீண்டும் நாக்பூர் எனக் கூறினார்.  மேலும் மூன்றரை லட்சம் கோடி என்று ராகுல் காந்தி சொன்னதை மாற்றி 50 ஆயிரம் கோடி என டிகேஎஸ். இளங்கோவன்  கூறினார்.

இவரின் செயல் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.