சென்னை: தமிழச்சி தங்கபாண்டியனும், ஜோதிமணியும் பாசத்துடன் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பட்டப் பகலில் பொது இடத்தில் கட்டிப் பிடி வைத்தியம்! 2 தமிழ் பெண் எம்பிக்களின் புகைப்படம் வைரல்!

திமுக சார்பாக தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல, ஜோதிமணியும் காங்கிரஸ் கட்சி சார்பாக, கரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். இருவரும் முதல்முறையாக, நாடாளுமன்றம் செல்கிறார்கள். அத்துடன், கூட்டணி கட்சி உறுப்பினர்கள் என்பதால், இருவரும் எங்கு சென்றாலும் தற்போது ஜோடியாக வலம் வருகிறார்கள்.
ஆம். இருவருமே எழுத்தாளர்கள், சமூக அக்கறை அதிகம் கொண்டவர்கள் என்ற நிலையில், இந்தி திணிப்பிற்கு எதிராக சமீபத்தில் இருவரும் ட்வீட்டரில் எதிர்ப்பு தெரிவித்து, பலரின் கவனம் ஈர்த்தனர். அத்துடன், இவர்கள் 2 பேரும் மிக நெருக்கமாக பாசத்துடன் கட்டியணைத்துக் கொள்ளும் ஒரு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இருவரும் முகமலர்ச்சியுடன், இப்படி கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளதை, பல்வேறு சமூக ஊடக பயன்பாட்டாளர்களும் பாசமலர்கள் என்ற கேப்ஷன் வைத்து பகிர்ந்து வருகிறார்கள்.
ஆனால், இந்த புகைப்படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் தேர்தலில் வென்ற பிறகு இருவரும் சந்தித்துக் கொண்ட போது இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. அண்மையில் கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் பங்கேற்க வந்த போது தமிழச்சியும் ஜோதிமணியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டுள்ளனர். அப்போது தான் இந்த பாச வெளிப்பாடு நிகழ்ந்துள்ளது.