தேனியில் ஈவிகேஎஸ்! கரூரில் ஜோதிமணி! குமரியில் வசந்தகுமார்! குஷ்பு எங்க தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திற்கான வேட்பாளர் பட்டியலை நள்ளிரவில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.


திமுக கூட்டணியில் பத்து தொகுதிகளில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த பத்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி திருவள்ளூரில் டாக்டர் ஜெயக்குமார் களம் இறக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமாரும், ஆரணியில் விஷ்ணுபிரசாத்தும் போட்டியிட உள்ளனர். கரூரில் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் திருநாவுக்கரசரும், தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், விருதுநகரில் மாணிக்கம் தாக்கூரும், கன்னியாகுமரியில் வசந்தகுமாரும் காங்கிரஸ் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர்.

சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிக்கிறது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் சுதர்சன நாச்சியப்பனும் சிவகங்கை தொகுதிளை பெற போட்டியிடுகின்றனர். இதே போல் குஷ்புவும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.

இதனால் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தற்போது வெளியான எந்த தொகுதியிலும் குஷ்புவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.