ஜார்கண்ட் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுகிறது! அதிர்ச்சியில் பா.ஜ.க.!

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்திருப்பது பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்தியும் பா.ஜ.கா.வால் வெற்றி பெறமுடியாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறது. மெஜாரிட்டிக்குத் தேவையான 41 இடங்களை காங்கிரஸ் கூட்டணி பெற்றுவிட்டதால், பா.ஜ.க. எந்த தில்லுமுல்லுவுடம் காட்ட முடியாத நிலைக்குப் போயுள்ளது. காங்கிரஸ் கட்சி அமைத்துள்ள கூட்டணிதான் இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவிலேயே கல்வியறிவில் பின் தங்கிய பழங்குடிகள் , ஏழ்மையிலும் ஏழ்மைகளாக மக்கள் வாழும் மாநிலம், ஆனால் கார்ப்பரேட்டுகள் தேனீக்களைப் போல மொய்க்கும் மாநிலம், காரணம் கனிம வளம். அத்தகைய ஜார்கண்டில் பாஜக ஆட்சியை இழப்பது புவியியல் ரீதியாக முக்கியமானது.

பா.ஜ.க.வின் கையில் இருந்த மாநிலத்தைக் கைப்பற்றியதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது. மகாராஷ்டிராவில் தோற்றுப்போன பா.ஜ.க.வின் உத்தி இங்கேயும் மண்ணைக் கவ்வியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடெங்கும் எதிரொலிக்கும் எதிர்ப்புத்தான் இந்தத் தோல்விக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தோல்வி பா.ஜ.க.வை அதிர வைத்துள்ளது.