இஸ்லாம் அலுவலகத்தை முடக்குவதற்கு வன்மையான கண்டனங்கள்!

தமிழகத்தில் இயங்கி வரும் தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தில் மத்திய அரசின் ஏஜென்ஸிகள் ரெய்டு நடத்தி சீல் வைக்கும் முயற்சி செய்வதாக இஸ்லாம் இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது முதல் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது.அவற்றை மக்கள் முன் அம்பலப்படுத்தும் இஸ்லாமிய அமைப்புகளை தனது ஏவல் துறையாக உள்ள அமலாக்க துறை,வருமான வரித்துறை,சிபிஐ போன்ற நிறுவனங்கள் மூலம் ஒடுக்க நினைக்கிறது.

 மக்கள் சேவையில் ஜாதி,மதம் பாராமல் செயல்படுவதோடு பேரிடர் காலங்களில் மக்களுக்கு சேவை செய்து வரும் இஸ்லாமிய அமைப்புகளின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் சூழ்ச்சிகளை இஸ்லாமிய இயக்கங்கள் வெற்றிகரமாக இதுவரை சமாளித்தே வந்துள்ளன.

 இதற்கு முன் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் ரெய்டு நடத்தி வெறுங்கையுடன் ஏமாறியது போல் இந்த முறையும் பாஜக ஆதரவு ஏஜென்ஸிகளுக்கு ஏற்படும் என்பதை தெரிவித்து கொள்வதோடு,தொடரும் பாஜகவின் இந்த மக்கள் விரோத செயல்களை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.