திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குடி போதையில் கம்பவுண்டர்! தட்டிக்கேட்டவருக்கு நிகழ்ந்த அநியாயம்!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டர் குடிபோதையில் வந்ததை தட்டிக்கேட்ட வாலிபரை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளிய கம்பவுண்டர்.


வேலூர் மாவட்டம் நாட்றம்ப்பள்ளி பச்சூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன்(50) இவருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி இருப்பதால் இந்நிலையில் வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க அரசு மருத்துவரின் பரிந்துரை கடிதம் பெற ஜெகதீசன் அவரது மகன் அரவிந்த் குமார் ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

அங்கு மருத்துவ அரைக்குள் இருந்த எழும்பு மருத்துவர் சிவக்குமாரிடம் சென்று கேட்டதற்கு அவர் பதில் எதுவும் கூறாமல் அலட்சியம் செய்தாராம் பின்னர் அங்கிருந்த கம்பவுண்டர் மாரிமுத்து என்பவர் குடி போதையில் அவர் வந்து நீங்கள் கனிசமான தொகையை குடுத்தால் மட்டுமே பரிந்துரை கடிதம் வழங்கப்படும் என்று கூறிய கம்பவுண்டர் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்.

இருவருக்கும் வாக்கு வாதம் நடந்தது இதனால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது