விஜய் டிவி புகழ் சிங்கப்பூர் தீபனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் தற்போது குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் ரெண்டு..! மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் கலக்கப் போவது யாரு தீபன்! ஏன் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிங்கப்பூர் தீபன். இதையடுத்து அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழின் மூலம் மேலும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது நகைச்சுவை திறனை வெளிப்படுத்திள்ளார்.
இதையடுத்து அவரது நடிப்பு திறமையாலும் தமிழ்த்திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது இந்நிலையில் தமிழில் வெளியான "ஹலோ நான் பேய் பேசுறேன்" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து சிங்கப்பூர் தீபன் சுகன்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர்களின் ஒப்புதலின் படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தற்போது அவர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் தீபன் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படத்தைப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.